ஆரணி அருகே விநாயகர் கோவில் இடிப்பு
ADDED :834 days ago
ஆரணி: ஆரணி அருகே, விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.வி., நகரத்திலிருந்து சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தன. மேலும், சாலை மையத்தில் விநாயகர் கோவிலும் இருந்தது. இதனால், ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்.வி. நகரத்தில், சாலையின் மையத்தில் அமைந்திருந்த விநாயகர் கோவிலை, பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர்.