கீழாநிலைக்கோட்டை அரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :887 days ago
புதுக்கோட்டை: கீழாநிலைக்கோட்டை அரியநாயகி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரியநாயகி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக,விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி,, துர்கா, லட்சுமி, நவக்கிரக ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று, கால வேள்வி, சீர் எடுத்து வருதல் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து ராஜகோபுரம், பரிவார தெய்வ கோபுரங்களை தொடர்ந்து, மூலஸ்தான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.