ஞானானந்தா நிக்கேதனில் வியாச பூஜை
ADDED :892 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் தபோவனம் ஸ்ரீ ஞானானந்தா நிக்கேதனில் நடந்த வியாச பூஜையில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வேதத்தை நான்காக வகுத்தவரும், பகவத் கீதை உள்ளடக்கிய மகாபாரதத்தை இயற்றியவருமான வேதவியாசரின் நினைவாக கொண்டாடப்படுவது வியாச பூஜை. குரு பரம்பரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான இப்பூஜை, திருக்கோவிலூர், ஸ்ரீ ஞானானந்தா நிகேதனில் உள்ள சத்சங்க மண்டபத்தில் நடந்தது. சுவாமி நித்தியானந்தகிரி அருளாசியுடன், சுவாமி பிரபவானந்த சரஸ்வதி, சுவாமி ராமானந்தகிரி மற்றும் விவேகானந்த கல்லூரி முன்னாள் முதல்வர் சீனிவாசன் ஆகியோர், வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, வியாச பூஜையை நடத்தினர். ஞானானந்தா நிக்கேதன் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பரமேஸ்வரன், ஸ்ரீபதி, சுவாமிநாதன், வெங்கடேஷ்நாராயண உள்ளிட்ட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.