உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 3 ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோவில் சிலை பிரதிஷ்டை; வழிபாடு துவக்கம்

3 ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோவில் சிலை பிரதிஷ்டை; வழிபாடு துவக்கம்

செஞ்சி: செஞ்சி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாதேவ ஈஸ்வரன் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு விழா நடத்தினர்.

செஞ்சி பகுதியில் இருந்த ஏராளமான கோவில்கள் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டன. இதன் பிறகு கோவில்களை புதுப்பிக்காமல் பாழடைந்த அழிவின் விளிம்பில் ஏராளமான கோவில்கள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற கோவில்களில் சில வற்றை அந்தந்த பகுதி மக்கள் திருப்பணிகள் செய்த மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இதே போல் செஞ்சியை அடுத்துள்ள திருவதிகுன்னம் மலை மீது பாழடைந்து புதர் மண்டி இருந்த சிவன் கோவிலை திருப்பணி செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். மலை மீது செல்வதற்கே வழி இல்லாமல் புதர்மண்டி காடுபோல இருந்த பகுதியை கடந்த ஒரு ஆண்டாக செப்பனிட்டு இன்று திருப்பணி துவக்க விழா நடத்தினர். சிவகாமி உடனுரை மகாதேவ ஈஸ்வரர் என பெயரிட்டு நேற்று மாலை 6 மணிக்கு முதல் கால வேள்வியும், இன்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், 9 மணிக்கு மகாதேவ ஈஸ்வரரை பிரதிஷ்டை செய்து திருக்குட நன்னீராட்டும் நடந்தது. 10.30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், தமிழ்நாடு திருக்கோவில் கூட்டமைப்பு தலைவர் பாபு மற்றும் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அரங்காவலர்கள், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !