உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நடக்கும் அன்னதானத் திட்டத்திற்காக ரூபாய் ஒரு லட்சத்து 662(1,00,662/) மற்றும் தேவஸ்தானம்  "கோ பாதுகாப்பு அறக்கட்டளைக்காக" 2 லட்சத்து 1266 ரூபாய் மொத்தம் மூன்று லட்சத்து 1928 ரூபாய் காண காசோலையை ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த ராஜேஷ் பாபு குடும்பத்தினர் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் துணை செயற்பொறியாளர் ரவீந்திர பாபு விடம் வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு  கோயில் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர் கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகப் பெருமானை தரிசனம்  செய்த பின்னர் ராஜேஷ் பாபுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் விநாயகப் பெருமானின் திருஉருவப்படத்தையும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !