ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்
ADDED :1137 days ago
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம் நடந்தது. ரிஷிவந்தியத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ பெருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 29ம் தேதி திருக்கல்யாணம், 1ம் தேதி தேரோட்டம் நடந்தது. தேரோட்ட விழா நிறைவாக 3ம் தேதி விடையாற்றி உற்சவம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ஊஞ்சல் உற்சவத்துடன் பிரமோற்சவ விழா நிறைவுற்றது. பூஜை ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.