கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சமுத்திர தீர்த்த ஆரத்தி
ADDED :897 days ago
நாகர்கோவில்: ஆனி மாதம் பவுர்ணமி சமுத்திர தீர்த்த ஆரத்தி கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் கன்னியாகுமரி திருத்தொண்டர் பேரவையால் நடத்தப்பட்டது. இமயமலை கங்கோத்ரி ஸ்ரீமத் சுவாமி தபோமயானந்தஜி மகராஜ் மஹா தீப ஆரத்தியை ஏற்றினார். அதனை தொடர்ந்து டாக்டர் சொர்ணலதாராஜூ, பிரேமாவதி சுரேஷ் , கவிதா கார்த்திக், சுப்புலக்ஷ்மி வீரபாண்டி ஆகியோர் தீபம் ஏற்றினர். பெண்கள் அகல் விளக்கு ஏற்ற, கயிலாய வாத்தியம் இசைத்து, திருமுறைகள் ஒதலுடன் நடராஜர் புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில், பேரவையின் தலைவர் ராஜகோபால், பொதுச்செயலாளர் சந்திரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி மற்றும் முருகேஷ், ஜெ யராம், சஞ்சீவ்குமார், சிவ பெரிய நாயகம், ஷ்யாம் குமார், வீரபாண்டி, முத்து, ராணி ரஞ்சன், கோகிலா, சிந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.