கருமத்தம்பட்டியில் அய்யப்ப சுவாமி திருவீதி உலா
ADDED :8 hours ago
கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டியில் நடந்த அய்யப்ப சுவாமி திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கருமத்தம்பட்டி ஓம் ஸ்ரீஐயப்ப சேவா அறக்கட்டளை சார்பில், இரண்டாம் ஆண்டு அய்யப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது. கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், திருவீதி உலாவை துவக்கி வைத்தார். முன்னதாக, அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருமத்தம்பட்டி, கருமத்தம்பட்டி புதூர், சோமனூர் பவர் ஹவுஸ், அன்னூர் ரோடு வழியாக சென்ற ரதம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில், 200 க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமியுடன் சென்றனர்.