சங்கடஹர சதுர்த்தி பூஜை: வெள்ளி கவசத்தில் விநாயகர் அருள்பாலிப்பு
ADDED :1199 days ago
விளாச்சேரி: வெங்கடேச பெருமாள் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. விழாவில் வெள்ளி கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.