வடதிருநாவலூர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடாலய ரஜதபந்தன மஹா கும்பாபிஷேகம்
ADDED :901 days ago
விழுப்புரம் : மொரட்டாண்டி, வடதிருநாவலூர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடாலய ரஜதபந்தன மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், மொரட்டாண்டி கிராமம், வடதிருநாவலூர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடாலய ரஜதபந்தன மஹாகும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு ஹோமங்கள், பூர்ணாகுதி, கலசம் புறப்பாடாடு நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற திருமடாலய ரஜதபந்தன மஹாகும்பாபிஷேகம், ஆரத்தி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.