கூடலுாரில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை
ADDED :10 hours ago
கூடலுார்; கூடலுாரில் இருந்து பழநிக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
கூடலுாரில் இருந்து சுருளிமலை பழநி மலை பாதயாத்திரை குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் பழநிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். நேற்று சுருளி அருவியில் தீர்த்தம் எடுத்து வந்து கூடலுாரில் உள்ள முக்கிய வீதிகளான காமாட்சியம்மன் கோயில் தெரு, மெயின் பஜார், நடுத்தெரு வழியாக கூடல் சுந்தரவேலவர் கோயிலை அடைந்தனர். அங்கு அபிஷேகம் ஆராதனை முடித்த பின் குருசாமி சிவராஜ் தலைமையில் பாதயாத்திரையை நேற்று இரவு துவக்கினர். சின்னமனூர், வீரபாண்டி, லட்சுமிபுரம், பெரியகுளம், தேவதானப்பட்டி, வத்தலகுண்டு, செம்பட்டி, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி வழியாக ஒரு வாரம் நடந்து சென்று டிச.29ல் பழநியை சென்றடைந்து சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.