ஆனி வெள்ளி: ஜெயமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :1148 days ago
கோவை : சுந்தராபுரம் காமராஜ் நகர் மதுக்கரை ரோட்டில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர், சித்தி விநாயகர், ஜெய மாரியம்மன் கோவிலில் ஆனி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு மூலவர் ஜெயமாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் விபூதி காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.