உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மட்டப்பாறை செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

மட்டப்பாறை செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி: மட்டப்பாறை செல்வ விநாயகர் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி அடுத்த மட்டப்பாறை செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்து ஜீர்ணோத்தாரன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜையும், யாகசாலை வேள்வியும் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கோ பூஜை, மகா சங்கல்பம், விசேஷ திரவிய ஹோமம், 10 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும் 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து செல்வ விநாயகருக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !