உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோசமான வானிலை, கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

மோசமான வானிலை, கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

ஸ்ரீநகர் : மோசமான வானிலை, கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய கடந்த 1ம்தேதி முதல் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை நிலவுவதாலும், கனமழையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வானிலை சீரடைந்தபின் யாத்திரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 84,768 பேர் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்த பனி லிங்க தரிசன யாத்திரை ஜூலை 1ல் தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி முடிவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !