திருப்பூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜை
ADDED :1145 days ago
திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் நகரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆனி சப்தமி திதியை முன்னிட்டு கோவிலில் உள்ள சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் செந்நிற ஆடையில் பக்தர்களுக்கு காட்சி சூரிய பகவான் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.