உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

ஹிந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட கோயிலுக்கு‌‌ திருவிழா காலங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஜூலை 4ல் சாட்டுதலுடன் கம்பம் நடப்பட்டது. இன்று கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக துவங்கியது. தினமும் குதிரை, ரிஷபம், சிம்மம், அன்னபட்சி, யானை, மின் ஒளி, பூ பல்லாக்கில் உற்ஸவ அலங்காரத்தில் தினமும் அம்மன் வீதி உலா நடக்கும்.முக்கிய திருவிழாவான ஜூலை 18ல் மா விளக்கு உற்சவமும், மறுநாள் அக்னிச்சட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். ஜூலை 25 மறுபூஜை ,பாலாபிஷேகம் நடக்க உள்ளது. கொடிக்கம்பத்தை சுற்றி தர்ப்பை புல் சுற்றப்பட்டது. முன்னதாக கொடி கம்பத்திற்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர் உட்பட 12 வகையான அபிஷேகங்களும், தீபாராதனையும் காட்டப்பட்டது.

சிங்ககொடி அம்மன் : கொடியில் சிங்கம் படம் வரையப்பட்டிருந்தது. செயல் அலுவலர் ராமதிலகம், பூஜாரிகள் முருகன், ராஜசேகர், வர்த்தக சங்க தலைவர் சிதம்பரசூரிய வேலு, செயலாளர் சீத்தாராமன், பொருளாளர் அன்னகாமு, மண்டகப்படிதாரர் ஜோதிசாமி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !