உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமுகத்து கருப்பு சுவாமி, செகுட்டு அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா துவக்கம்

வடமுகத்து கருப்பு சுவாமி, செகுட்டு அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா துவக்கம்

மேலுார்: மத்தம்மேலநாடு, அ.வல்லாளபட்டி நடுவளவு கிராமத்திற்கு உட்பட்ட காமாட்சி அம்மன், வடமுகத்து கருப்பு சுவாமி, செகுட்டு அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா இன்று துவங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் இன்று பக்தர்கள் அழகர்கோவில் நுாபுரகங்கையில் தீர்த்தமாடினர். நாளை (ஜூலை 11) களறி (சுவாமி) ஆடுதல் நிகழ்ச்சியும், ஜூலை 12 நடுவளவில் இருந்து வடமுகத்து கருப்பு சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் சிலை எடுக்கின்றனர். ஜூலை 13 காமாட்சி அம்மன் கோயிலுக்கு சிலை எடுத்தல் நிகழ்ச்சியும், ஜூலை 14 ல் நடுவளவில் இருந்து செகுட்டு அய்யனார் கோயிலுக்கு புரவிகளை கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !