முத்துமாரியம்மன் கோவிலில் விஷ்ணு துர்க்கைக்கு சிறப்பு பூஜை
ADDED :891 days ago
கோவை : கோவை ராம் நகர் வி .என் .தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆனி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.