உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்.. செய்யக்கூடாது?

இன்று செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்.. செய்யக்கூடாது?

செவ்வாய் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். முருகன், பூமாதேவி ஆகியோரை வணங்கி செவ்வாய் அன்று மங்கலப் பொருட்கள் வாங்குவோருக்கு செல்வம் பல மடங்கு பெருகிவரும் என்பது ஐதீகம்.  செவ்வாய் தோஷ பரிகாரம், ஹோமம், பூமி பூஜை போன்ற வழிபாடுகளை செவ்வாய் கிழமை செய்யலாம்.

செவ்வாய் கிழமை அன்று கடன் வாங்க கூடாது. வாங்கிய கடனை திரும்ப கொடுத்தால் மொத்த கடனும் விரைவில் அடைபடும். செவ்வாய்க்கிழமையில் மௌன விரதம் இருந்தால் யாகம் செய்வதற்கு சமமான பலன்கள் கிடைக்கும். அதேபோல் செவ்வாய் அன்று வீட்டையும் சாமி இடத்தையும் சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது. செவ்வாய் கிழமை அன்று தலைமுடி வெட்டுவதை தவிர்ப்பது நல்லது. இந்த நாளில் விவாதம் செய்தல், வீண்வார்த்தை பேசுதல் ஆகியவற்றை தவிர்த்து கொள்ளுதல் வேண்டும். இன்று முருகனை வழிபட எல்லாம் நன்மையாக நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !