/
கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசையில் உள்வாங்கிய தேவிபட்டினம் நவபாஷாண கடல்: வெளியே தெரிந்த நவகிரகங்கள்
ஆடி அமாவாசையில் உள்வாங்கிய தேவிபட்டினம் நவபாஷாண கடல்: வெளியே தெரிந்த நவகிரகங்கள்
ADDED :781 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடல் நீர் உள்வாங்கியதால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. நவக்கிரகங்களை பக்தர்கள் எளிதாக வழிபடும் வகையில், கடற்கரையில் இருந்து நவகிரகங்கள் அமைந்துள்ள பகுதி வரை சுமார் 300 மீட்டர் தொலைவு கடலுக்குள் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடல் நீர் உள்வாங்கப்பட்டு காணப்பட்டதால், நவக்கிரகங்கள் அமைந்துள்ள பகுதி கடல் நீர் இன்றி நவக்கிரகங்கள் அனைத்தும் தெளிவாக வெளியில் தெரிந்தன. இந்த நிலையில், இன்று ஆடி அமாவாசை தினத்தில் புனித நீராட வந்த பக்தர்கள் குறிப்பிட்ட தொலைவு வரை கடல் நீரின்றி சிரமம் அடைந்ததுடன், கடல் நீண்ட தொலைவு உள்வாங்கியதை கண்டு அச்சத்துடன் வழிபாடு செய்து சென்றனர்.