41 அடி உயர காளியம்மனுக்கு கிரேன் மூலம் அபிஷேகம்
ADDED :878 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த புது பூண்டிதாங்கல் கிராமத்தில் 41 அடி உயரம் உள்ள காளியம்மனுக்கு ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். அம்மனுக்கு கிரேன் மூலம் அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. இதில் பக்தர்கள் பரவத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.