உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவு பெட்டியில் தீர்த்த கலசம் வைத்து வழிபாடு

சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவு பெட்டியில் தீர்த்த கலசம் வைத்து வழிபாடு

காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில், இன்று முதல் தீர்த்த கலசம் இடம் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில், புகழ்பெற்ற சுப்ரமணியசுவாமி மலை கோவில் உள்ளது. இங்கு ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், பக்தர்களின் கனவில் சொல்லப்படும் பொருள், ஒரு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படுவது, நுாற்றாண்டு கால வழக்கமாக உள்ளது. இந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டியே கணிப்பதாக அமையும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பூஜை பொருள் பெட்டியில் இடம் பெறும். கடைசியாக கடந்த மே மாதம், 3ம் தேதி முதல் நேற்று வரை, வெங்கக்கல் மற்றும் இரண்டு சிவப்பு கயிறு, பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, ஆறுதொழுவை சேர்ந்த சரவணன் என்ற பக்தர் கனவில், தீர்த்த கலசம் வைக்க உத்தரவானது. இதை தொடர்ந்து பெட்டியில் தீர்த்த கலசம், இன்று முதல் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !