அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசை விழா
ADDED :892 days ago
நிலக்கோட்டை: அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசை கடைபிடிக்காத போதிலும் பக்தர்கள் திதி கொடுப்பதற்கும் புனித நீராடுவதற்கும் வந்திருந்தனர். இந்த ஆண்டு ஆடியில் இரண்டு அமாவாசை தினங்கள் வருகிறது. ஆகஸ்ட் 16ல் வருகின்ற அமாவாசையை திதி கொடுப்பதற்காக கடைபிடிக்க கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. இதனால் இன்று கூட்டம் குறைவாகவே இருந்தது. வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் நீராடுவதற்கு ஆற்றில் தற்காலிக கிணறு ஏற்படுத்தி குளிப்பதற்கு ரூ. 10 வசூலிக்கப்பட்டது. இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.
* வத்தலக்குண்டு வால் கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் சிறப்பு அலங்கார ஆஞ்சநேயரை தரிசித்து வழிபட்டனர்.