தாயே கருமாரி.. இன்று ஆடிச்செவ்வாய்.. அம்மன், முருகனை வழிபட நல்லதே நடக்கும்
ADDED :817 days ago
ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. இந்த ஆடிசெவ்வாய்களில் அம்மனுக்கு விரதமிருப்பவர்கள் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றிய பின் அம்மனுக்குரிய மந்திரங்களை கூறி வணங்க வேண்டும். அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும். இதனால் எல்லோரையும் காக்கும் தாயான அம்மனின் மனம் குளிர்ந்து நமக்கு ஆரோக்கியம் மேம்படும், திருமணம் புத்திரபேறு தாமதம் நீங்கும். எல்லாவித வளங்களும் உண்டாகும். இன்று வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி வணங்க வேண்டும். ஆடிச் செவ்வாய் அவ்வையாரம்மன் வழிபாடு சிறப்பு மிக்கது. இன்று அம்மன், முருகனை வழிபட ஆரோக்கியம் மேம்படும், கடன்கள் தீரும்.