பழநி முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்
ADDED :885 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா சுவாமி தரிசனம் செய்தார்.
ஆடி செவ்வாய்க்கிழமையான இன்று பழநி முருகன் கோயிலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வருகை புரிந்தார். அவரை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வரவேற்றார். ரோப்கார் மூலம் மலைக்கோயில் சென்ற துர்கா ஸ்டாலின் ஆனந்த விநாயகர் கோயிலில் வழிபாடு செய்த பின் உச்சிக்கால பூஜையில் சுவாமி தரிசனம் செய்தார் அதன் பின் போகர் சன்னதியில் வழிபாடு செய்தார். கோவிலில் பிரசாதம் வழங்கப்பட்டது. ரோப்கார் மூலம் பழநி அடிவாரத்திற்கு வந்தார். அவருடன் பழனி எம்.எல்.ஏ., செந்தில்குமார் மனைவி மெர்சி வருகை புரிந்தார். போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.