ஆடி முதல் நாள் கோயில்களில் சிறப்பு பூஜை
ADDED :1182 days ago
கூடலூர்: ஆடி முதல் நாளில் கூடலுார் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் . துர்க்கை அம்மன் கோயில், வீருகண்ணம்மாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.