ஆண்டியபட்டி சன்னாசிலிங்கம் கோயிலில் மண்டல பூஜை
ADDED :856 days ago
வடமதுரை: தென்னம்பட்டி ஆண்டியபட்டியில் சன்னாசிலிங்கம் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக 48ம் நாள் மண்டல பூஜை இன்று நடந்தது. திண்டுக்கல் கற்பககணபதி கோயில் அர்ச்சகர் காந்திகிருஷ்ணன், சுப்பிரமணிய அஷ்வின் தலைமையிலான குழுவினர் பல்வேறு யாக சாலை பூஜைகளை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாட்டினை ஜங்கமர் சமுதாய பிடுகூர் குல பங்காளிகள் செய்திருந்தனர்.