உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லோருக்கும் உதவுவோம்

எல்லோருக்கும் உதவுவோம்


மறுமையில் இறைவனை சந்திக்கும் மனிதனிடம் கீழ்க்கண்டவை கேட்கப்படும்:
1. உணவளிக்கும்படி நான் கேட்டேன். ஆனால் நீ உணவளிக்கவில்லை.
2. நான் நோயுற்றிருந்தேன். என்னை நீ நலம் விசாரிக்கவில்லை
அதற்கு மனிதன் கீழ்கண்டவற்றை கூறுவான்:
எல்லோரையும் பராமரிப்பவன் நீ. அப்படி இருக்க நான் எப்படி உனக்கு உணவு கொடுக்க முடியும். நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான்.
அதற்கு இறைவன் கூறுவான்:
எனது அடியான் ஒருவன் உன்னிடம் உணவு கேட்டான். நீ தரவில்லை. மற்றொருவன் நோயால் அவதிப்பட்டான். அவனை பார்க்க நீ செல்லவில்லை. இவர்களுக்கு உதவியிருந்தால் என்னை அடைந்திருப்பாய் எனக் கூறுவான்.
பார்த்தீர்களா... எல்லோருக்கும் உதவினால் மறுமையில் பலன் கொடுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !