உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்

நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்


* நல்லவனாக இரு. நல்ல செயல்களை செய். நல்ல வாழ்க்கை அமையும்.
* ஒருநாளில் வருவதல்ல ஒழுக்கம். தினமும் அதை பின்பற்று.
* நீ ஒழுக்கமுடன் வாழ்ந்தால் இந்த சமூகம் சீராகிவிடும்.
* தினமும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை செய்வதுதான் ஒழுக்கம்.
* தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களே உயர்ந்தவர்கள்.
* உண்மை எங்கு உள்ளதோ அங்கு கடவுள் இருப்பார்.  
* இனிய பொய்யை விட கசப்பான உண்மையே சிறந்தது.  
* குழந்தையின் மனம் துாய்மையானது. அதைப்போல் உன் மனதையும் வைத்திரு.
* உண்மை, அன்பு ஆகிய இரண்டுமே உலகின் பெரிய சக்தி.  
* உலகம் ஒரு கண்ணாடி போன்றது. நீ சிரித்தால் அதுவும் சிரிக்கும்.
* நாம் அதிகமாக நேசிக்கும் உருவத்திலேயே கடவுள் வெளிப்படுகிறார்.  
* உன் வாழ்க்கை சிறக்க, பிறருக்கு உதவி செய்.  
* முன்பு செய்த வினைகளின் விளைவாகவே உனக்கு நோய்கள் வருகின்றன.
* மனச்சோர்வை விட மோசமான நோய் வேறு இல்லை.
* உடல்நலத்தில் அக்கறையுடன் இரு. அப்போதுதான் சாதனை செய்ய முடியும்.   
* மனதில் இருக்கும் நோய் நீங்கினால் உடலில் இருக்கும் நோய் நீங்கும்
* பிறர் செய்யும் தவறை மறந்தால் அமைதி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !