குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா; குவிந்த பக்தர்கள்
ADDED :854 days ago
ஏரல்: குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனி எட்டாம்நாள் கொடைவிழா நேற்று விமரிசையாக நடந்தது. ஏரல் அருகே உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் கடந்த வாரம் ஆனிப் பெருந்திருவிழா விமரிசையாக நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று கோயிலில் எட்டாம் நாள் கொடைவிழா நடந்தது. விழா நிகழ்ச்சியாக காலையில் நாதஸ்வர இசை, கிளாரினெட் இன்னிசை, தொடர்ந்து முத்துமாலை அம்மன் கோயில் பஜனை குழுவினரின் பஜனை மற்றும் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் தீர்த்தவாரி, மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு சென்னைவாழ் குரங்கணி நாடார் சங்கத்தின் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார் பொதுமக்கள் செய்திருந்தனர்.