விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஆடி பூர விழா; அம்மன் உலா
ADDED :1183 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஆடி பூரம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 5ம் நாளில் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. அம்மன் கோயில் உள் வலம் வந்து அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.