அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.50 லட்சம் காணிக்கை
ADDED :852 days ago
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நேற்று உண்டியல்கள் எண்ணப்பட்டன. ரொக்கம் ரூ.50 லட்சத்து 37 ஆயிரத்து 63 ரூபாய், தங்கம் 35 கிராம், வெள்ளி 212 கிராம் கிடைத்தது. இப்பணியில் துணை கமிஷனர்கள் ராமசாமி, சுரேஷ், மேலுார் ஆய்வாளர் அய்யம்பெருமாள், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா பங்கேற்றனர்.