மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்
ADDED :849 days ago
சிவகங்கை: சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் கோவிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை 8:20 மணிக்கு கொடியேற்றத்திற்காக சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு கொடி மரத்திற்கு முன்பாக எழுந்தருளினர். இதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு நடைபெற்ற பின் கொடியேற்றம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது. 31ந் தேதி சந்தன காப்பு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.