உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூர் கோயிலில் கார்த்திகை பூஜை!

கூடலூர் கோயிலில் கார்த்திகை பூஜை!

சிவகிரி: சிவகிரி அருகேயுள்ள கூடலூர் நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை பூஜை நடந்தது. சித்தர்கள் வாசம் செய்யும் ஸ்தலமாகவும், பாம்பும், கீரியும் இன்றளவும் ஒரே சுனையில் நீர் அருந்தும் ஸ்தலமாகவும், 18 சித்தர்களுக்கு தனிக்கோயில் உள்ள சிறப்பு கொண்டது கூடலூர் நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலில் மாதந்தோறும் கார்த்திகை பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த மாத பூஜையன்று மதியம் 12 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், நெய், பன்னீர், கரும்புசாறு, இளநீர், விபூதி உட்பட 18 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார, தீபாராதனை பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு விபூதி, குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் அன்னதான கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான கமிட்டி தலைவர் சுப்பையாபாண்டியன், செயலாளர் ஜோதிராமலிங்கம், பொருளாளர் வலங்கப்புலி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குருசாமிபாண்டியன், முருக பக்தர்கள் சிவஞானபாண்டியன், சங்கரன்கோவில் மாரியப்பன், ஜோசியர் கணேசன், பிச்சையம்மாள், வக்கீல் முருகன், பூசாரி பழனிச்சாமி, சிவகிரி தாசில்தார் கஸ்தூரி, வாசு., ஆர்.ஐ.ராமலிங்கம், மண்டல தாசில்தார் சாந்தி உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாலை 6.30 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !