காரைக்குடி அழகியநாச்சி அம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :1183 days ago
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள அழகியநாச்சி அம்பாள் கோயிலில் 251 திருவிளக்கு பூஜை நடந்தது.
ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் திருவிளக்கு பூஜைகள் நடந்து வருகிறது. காரைக்குடி அருகே உள்ள கோ.அழகாபுரி சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அழகியநாச்சி அம்பாள் கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு 251 விளக்கு பூஜை நடந்தது. இதில் அழகாபுரி கோட்டையூர் மற்றும் சுற்றிப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.