உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலுக்கு ஒரு கிலோ எடையுள்ள தங்க வேல் காணிக்கை

பழநி கோயிலுக்கு ஒரு கிலோ எடையுள்ள தங்க வேல் காணிக்கை

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு கோவையைச் சேர்ந்த பக்தர் காணிக்கையாக தங்க வேலை செலுத்தியுள்ளார். பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் வைரம் பதித்த ஒரு கிலோ எடையுள்ள தங்க வேலை பழநி கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார். காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கவேலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !