உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை ஆடி பிரம்மோற்ஸவ விழா; கருட வாகனத்தில் வீதி உலா வந்த வீர அழகர்

மானாமதுரை ஆடி பிரம்மோற்ஸவ விழா; கருட வாகனத்தில் வீதி உலா வந்த வீர அழகர்

மானாமதுரை:  மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவம் விழாவில் கருட வாகனத்தில் வீர அழகர் செட்டிகுளம் மண்டகப்படிக்கு வீதி உலா சென்ற போது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்டமானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து முதலாம் நாள் செட்டிகுளம் மண்டகப்படிக்கு காலை 10:30 மணிக்கு கோயிலிலிருந்து கருட வாகனத்தில் வீர அழகர் சர்வ அலங்காரங்களுடன் வீதி உலா சென்ற போது மேளதாளங்கள், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி சுவாமியை அழைத்து சென்றனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டனர். செட்டிகுளம் கிராம மண்டகப்படியில் எழுந்தருளிய வீர அழகரை அப்பகுதி மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கிராமத்தின் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை மானாமதுரை செட்டிகுளம் கிராம நிர்வாகிகள் ராஜேந்திரன், முருகன் உள்பட கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !