உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் சுடலைமாட சுவாமி கோயில் கொடைவிழா

திருச்செந்துார் சுடலைமாட சுவாமி கோயில் கொடைவிழா

திருச்செந்துார்: திருச்செந்துார் மேலத் தெரு யாதவர் சமுதாய சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா நேற்று நடந்தது. கொடை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் எடுக்கப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரவு சுவாமிக்கு கும்பம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 12 மணிக்கு குடியழைப்பு தீபாராதனையும் காப்பு கட்டுதலும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு வாழைத்தார்கட்டி நேர்ச்சை செலுத்தினர். 


விழாவின் முக்கிய நாளான நேற்று பகல் மற்றும் இரவு 12.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 1.30 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. இன்று அதிகாலை 4.00 மணிக்கு படைப்பு தீபாராதனையும் 7.00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. கொடை விழாவில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணன், மாவட்டஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்துார் ஒன்றிய குழுத்தலைவர் செல்வி வடமலைபாண்டியன், விவேகாகன் ஸ்ட்ரக்ஷன் இஞ்சினியர் நாராயணன், வெங்கடேஷ், யாதவ வியாபாரிகள் சங்கதலைவர் பெரியசாமி, ராஜ் எண்டர்பிரைசஸ் ராஜ், திமுக சமூகவலைதள பிரிவு மாவட்ட பொருப்பாளர் நம்பிராஜ், வீரபாகு மஹால் வீரபாகு, ஓட்டல் அர்ச்சனாசக்தி, அதிமுக., முன்னாள் ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, முத்து மணிகண்டன், அதிமுக மாவட்ட பிரதிநிதி ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், லெக்ஷ்மி சூமார்ட் பன்னீர்செல்வம், கண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆறுமுகம், முத்துகிருஷ்ணன், வீரக்கண், ராஜேஷ்வரன், செங்கண்ணன், மூக்கன், மயில்மணி, மந்திரம், நல்லக்கண்ணு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை யாதவ மகாசபையினர் மற்றும் கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !