நவசக்தி மகா வாராகி அம்மன் கோயிலில் பைரவருக்கு அபிஷேகம்
ADDED :852 days ago
கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராகி மந்திராலயம் டிரஸ்ட், நவசக்தி மகா வாராகி அம்மன் கோவில் ஸ்ரீ மஹா காலபைரவர், அஷ்ட பைரவர் கோயிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் மூலவர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த பைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.