சேஷ வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :903 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். இக்கோயிலில் கொடி ஏற்றத்துடன் விழா தொடங்கி நடந்து வரும் நிலையில் தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் அருள் பாலிக்கிறார். நேற்று அருள் கிருஷ்ண அவதாரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். தொடர்ந்து ஆக., 1 ல் ஆடி தேரோட்டம் நடக்கிறது.