அருணாசலேஸ்வரர் கோவிலில் குதிரை வாகனத்தில் வலம் வந்த சேரமான் ராஜா
ADDED :904 days ago
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுந்தரமூர்த்தி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு, சுந்தரமூர்த்தி சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாடவீதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவில் குதிரை வாகனத்தில் சேரமான் ராஜா சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாடவீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.