ஆடி வெள்ளி; வாராஹி அலங்காரத்தில் புவனேஸ்வரி அம்மன் அருள்பாலிப்பு
ADDED :799 days ago
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. வாராஹி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.