சொக்கநாதன் புத்தூர் கோயில் புரட்டாசி விழா துவங்கியது!
ADDED :4760 days ago
சேத்தூர்: சொக்கநாதன்புத்தூர் முப்பிடாதியம்மன் கோயில், புரட்டாசி பூக்குழி விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.தினம் அம்மன் பல்வேறு வாகனங்களிள் வீதி உலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக வரும் 12ம் தேதி மாலையில், காப்பு கட்டிய பக்தர்கள், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடை முப்பிடாதியம்மன் கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். *இதுபோல் சொக்கநாதன்புத்தூர் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட, மாரியம்மன் கோயில் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு, அம்மன் வீதி உலா நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 12ம் தேதி காலையில் ,தேரோட்டம் நடைபெறும். சுற்று பகுதியினர் கலந்து கொள்வர். ஏற்பாடை விழாக்குழவினர் செய்து வருகின்றனர்.