திருப்பதி பெருமாள் அலங்காரத்தில் கோதண்டராமர் வீதியுலா உற்சவம்!
ADDED :4811 days ago
கள்ளக்குறிச்சி: திருப்பதி பெருமாள் அலங்காரத்தில் நீலமங்கலம் கோதண்டராமர் வீதியுலா உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் உள்ள சீதா, லட்சுமண, ஹனுமந்த் சமேத கோதண்டராமர் கோவில் உள்ளது. நூற்றாண்டு சிறப்பு பெற்ற இக்கோவிலில் முதல் முறையாக புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை இரவு வீதியுலா உற்சவம் நடந்தது.நேற்று முன்தினம் மாலை சீதை, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், சுதர்சனர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திருப்பதி பெருமாள் அலங்காரத்தில் கோதண்டராமர் அருள் பாலித்தார்.வேத மந்திர உபச்சாரங்களுக்கு பிறகு ஸ்ரீராம பக்தர்கள் நாம சங்கீர்த்தன பஜனை பாடினர். தேரோடும் வீதியில் இரவு சாமி வீதியுலா நடந்தது.