திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஆடி பிரதோஷம்
ADDED :804 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஆடி.பிரதோஷ விழா நடந்தது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4:30 மணிக்கு நந்தி தேவர், மூலவர்,உற்ஸவர பிரதோஷநாதர் ஆகியோருக்கு சிவாச்சார்யர்கள் ஏக காலத்தில் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்திதேவர்,சுவாமி அருள்பாலிக்க தீபாரதனை நடந்தது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்ஸவர் எழுந்தருளி பக்தர்களுடன் பிரகார வலம் நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்று பிரகார வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.