உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

பழநி: பழநி முருகன் கோவிலுக்கு விடுமுறை நாளான இன்று (ஞாயிறு)அதிக பக்தர்கள் கூட்டம் இருந்தது.

பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் பல நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர்.‌ பழநி மலை அடிவாரம், கிரிவீதி சன்னதி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருந்தது. அடிவாரம் முக்கிய வீதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !