உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகிரி இலக்கனேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

சிவகிரி இலக்கனேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

சிவகிரி: சிவகிரி இலக்கனேஸ்வரர்- காந்தேஸ்வரி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. சிவகிரி இலக்கனேஸ்வரர்- காந்தேஸ்வரி கோயிலில் பூக்குழி திருவிழா நடந்து வருகிறது. விழாவில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. விழாவில் நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது. நிகழ்ச்சியில் டாக்டர் செண்பக விநாயகம், விவேகா ஆங்கில மேல்நிலை பள்ளி நிறுவனர் முருகேசன், மருதுபாண்டியன், டாக்டர் சுமதி, டாக்டர் சண்முக சுந்தரி, முன்னாள் டவுன் பஞ்., தலைவர் கே.ஜி.போஸ், வக்கீல் துரைபாண்டியன், பா.ஜ., ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் திருஞானம், தேவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், கோவில் தர்மகர்த்தா நடராஜன் வரவேற்றனர். திருமண வைபவம் முடிந்ததும், வேல்சாமி தேவர்-வேலம்மாள் நினைவாக திருப்பதி, பத்மா, வெங்கடேஷ், ராஜலட்சுமி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு 11 மணிக்கு பள்ளியறை காட்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !