குறுக்குத்துறை முருகன் கோயிலில் திருவாவடுதுறை ஆதீனம் ஆய்வு
ADDED :802 days ago
திருநெல்வேலி: குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடந்துவரும் திருப்பணிகளை திருவாவடுதுறை ஆதீனம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்காக பல திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் திருப்பணிகளை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பார்வையிட்டார்.
தொடர்ந்து திருப்பணிகள் குறித்து சில ஆலோசனைகளையும் பணியாளர்களுக்கு வழங்கினார்.