உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் பாதை திறப்பு; ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டபடி சென்ற பக்தர்கள்

அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் பாதை திறப்பு; ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டபடி சென்ற பக்தர்கள்

அயோத்தி; உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலுக்கு செல்லும் பாதை நேற்று திறக்கப்பட்டது. பிர்லா தர்மசாலா என்ற இடத்திலிருந்து சுக்ரீவர் கோட்டை வழியாக ராமர் கோவிலுக்கு செல்லும் வகையில் 600 மீட்டர் நீளத்துக்கு இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் துாரம் குறையும். இந்த பாதை திறக்கப்பட்டதும் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி ஏராளமான பக்தர்கள் சென்றனர்.  வரும் ஜனவரியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதையடுத்து, கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !