/
கோயில்கள் செய்திகள் / பழநியில் ஹிந்து அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய தடை; போர்டு வைக்க ஐகோர்ட் உத்தரவு
பழநியில் ஹிந்து அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய தடை; போர்டு வைக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED :873 days ago
மதுரை: ஹிந்து அல்லாதோர் பழநி கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை கோயில் முன்பாக நிறுவ வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, ஏற்கனவே இருந்த அறிவிப்பு பலகை நீக்கப்பட்டது ஏன் ? தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார் . தொடர்ந்து " ஹிந்து அல்லாதோர் கோயிலில் நுழைய தடை " என்ற அறிவிப்பு பலகையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.